உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி: தருமாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தலைமையாசிரியர் பஜூலுதீன் தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர் கீதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் தேன்மொழி வரவேற்றார். புதுவை முத்தமிழ் மன்ற நிறுவனர் செந்தில்குமரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் பிரதாப், மாமுகிலன், காமேஷ் ஆகியோருக்கு ரொக்க பரிசு வழங்கி வாழ்த்தினார்.ஆசிரியர் ஆதிகேசவன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அஞ்சலை, கரிகாலன், கனகவள்ளி, சங்கர், கணேசன், உமாமகேஸ்வரி, கெஜலட்சுமி, ஜெயபாரதி, வேல்முருகன், நுாலக ஆசிரியர் சேகர், உதவியாளர் செந்தில்குமார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை