மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
53 minutes ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 11
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
1 hour(s) ago
காரைக்கால் புதுச்சேரி அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், தமிழ் குரோதி வருட பஞ்சாங்கத்தை புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.புதுச்சேரி மாநிலம், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், குரோதி வருஷ பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. சித்திரை முதல் நாளாகிய நேற்று பஞ்சாங்க முதல் பிரதியை, புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாளர்கள் சங்க புதுச்சேரி மாநிலத் தலைவர் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் பெற்றுக் கொண்டார். மாநில துணைத் தலைவர் திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார், கொள்கை பரப்பு செயலாளர் சேது சுப்பிரமணிய சிவாச்சாரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, வேத ஆகம மங்கள ஆசிர்வாதத்துடன் கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
53 minutes ago
1 hour(s) ago | 11
1 hour(s) ago