உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்ட விழிப்புணர்வு கூட்டம்

சட்ட விழிப்புணர்வு கூட்டம்

புதுச்சேரி, : புதுச்சேரி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் 'நியாய ஒளி' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பள்ளி கல்லுாரிகளில் 'நியாய ஒளி' குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் இடையே நீதித்துறை மற்றும் சட்ட வல்லுநர்களை கொண்டு சட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக காலாப்பட்டு தனியார் சமூக நலக் கூடத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. சட்டக் கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். சென்னை ஐகோர்ட் நீதிபதி ரமேஷ் கலந்து கொண்டு, சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அவர்களுக்கு இருக்கக்கூடிய சட்ட பாதுகாப்புகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். சட்டக் கல்லுாரி உதவி பேராசிரியர் லலிதா திரிபுரா சுந்தரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை