மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
பாகூர்: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி' நடந்தது. புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டு துறையின் கீழ் இயங்கும் மிஷன் சக்தி மற்றும் புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையம் இணைந்து பாகூர் கமலா நேரு திருமண மண்டபத்தில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. மிஷன் சக்தி மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் வரவேற்றார். மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் சாலமன் சவரிராஜ், புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தின் மூத்த அறிவிப்பாளர் உமா மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.வழக்கறிஞர் சரவணன் 'புதிய குற்றவியல் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், முக்கிய கூறுகள், சட்டத்தில் இருக்கும் தண்டனைகள் குறித்து விளக்கினார். எலிசபெத் ராணி மற்றும் குழுவினர், தன்னம்பிக்கை கலை குழுவினரின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டு துறையின் திட்டங்கள் குறித்தும், குழந்தை திருமணம், பெண்களுக்கான பாலியல் பிரச்சனைகள், குடும்ப வன்முறைகள் குறித்து கிராமிய பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago