மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
18 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
18 hour(s) ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
18 hour(s) ago
வாய்க்கால் அமைக்கும் பணி
18 hour(s) ago
புதுச்சேரி: சாராய, கள்ளுக்கடை ஏலம் இரண்டாவது நாளிலும் தள்ளாட்டம் கண்டது. இன்று மூன்றாவது நாளாக மறு ஏலம் விடப்படுகிறது.புதுச்சேரி மாநிலத்தில், 110 சாராயக்கடைகள், 92 கள்ளுக்கடைகள் உள்ளன. கிஸ்தி தொகை கட்டாத இந்த கடைகள் அனைத்தும் மின்னணு முறையில் அரசு ஏலம் விட முடிவு செய்துள்ளது. கடந்த 29ம் தேதி முதல் நாள் ஏலம் துவங்கிய சூழ்நிலையில், 110 சாராயக்கடைகளில் ஒன்று கூட ஏலம் போகவில்லை. 14 கள்ளுக்கடை மட்டுமே ஏலம் போனது. இரண்டாம் நாளாக 5 சதவீத கிஸ்தி தொகையை குறைத்து நேற்று மின்னணு முறையில் ஏலம் நடந்தது. ஆனால் இரண்டாவது நாளிலும் சாராயக்கடை உரிமையாளர்கள் ஏலத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.அதே வேளையில் நேற்று மேலும் 9 கள்ளுக் கடைகள் ஏலம் போனது. கூனிச்சம்பட்டு கள்ளுக்கடை 36,100 ரூபாய், கரியமாணிக்கம் கள்ளுக்கடை 31,000, கருவடிக்குப்பம் கள்ளுக்கடை 23,144, சிவராந்தகம் கள்ளுக்கடை 15,334, அபி ேஷகபாக்கம் கள்ளுக்கடை 14,165, பிள்ளையார்குப்பம் கள்ளுக்கடை(2)-8,080 ரூபாய்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக தர்மபுரி கள்ளுக்கடை 4,154 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.5 சதவீதம் குறைப்பு92 கள்ளுக்கடைகளில் முதல் நாளில் 14, இரண்டாம் நாளில் 9 என மொத்தம் 23 கடைகள் ஏலம் போனது. இரண்டு நாள் ஏலத்திலும் 110 சாராயக்கடைகள் ஏலம் போகாத நிலையில், மேலும் 5 சதவீத கிஸ்தி தொகையை குறைத்து இன்று மூன்றாவது நாளாக ஏலம் விடப்பட உள்ளது.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago