உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடல் வழியாக கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்

கடல் வழியாக கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, தமிழகத்திற்கு கடத்தப்படும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் காரைக்கால்மேடு அருகில் உள்ள கடல் பகுதியில் படகு மூலம் தமிழகத்திற்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், தமிழகத்திற்கு கடத்தி செல்வதற்காக படகில் பதுக்கி வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் மது கடத்த முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை சீனியர் எஸ்.பி., மனீஷ், எஸ்.பி., சுப்ரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் கலால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை