உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காட்டேரிக்குப்பத்தில் சாராயம் பறிமுதல்

காட்டேரிக்குப்பத்தில் சாராயம் பறிமுதல்

திருக்கனுார், : தமிழகப் பகுதிக்கு கடத்த முயன்ற சாராய பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.காட்டேரிக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சுத்துக்கேணி மயிலம் பாதை வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 8 லிட்டர் சாராயத்தை 47 பாக்கெட்களில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், சாராயம் கடத்தி வந்த கடப்பேரிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலைச்செல்வன், 34; என்பவரை கைது செய்தனர்.பின்னர், கைது செய்யப்பட்ட கலைச்செல்வன், பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் மோட்டார் பைக் ஆகியவை மேல் நடவடிக்கைக்காக புதுச்சேரி கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ