உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொரட்டாண்டி நவகிரக கோவிலில் இன்று மகா யாகம், லட்சார்ச்சனை

மொரட்டாண்டி நவகிரக கோவிலில் இன்று மகா யாகம், லட்சார்ச்சனை

புதுச்சேரி,: மொரட்டாண்டி நவகிரக கோவிலில் குரு பெயர்ச்சி மகா யாகம் - லட்சார்ச்சனை இன்று நடக்கிறது.புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் நவகிரக கோவில் அமைந்துள்ளது. இங்கு, உலகிலேயே மிக உயரமான 12 அடி உயர குரு பகவான் அருள்பாலிக்கிறார்.குரு பகவான் மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு, மொரட்டாண்டி கோவிலில் இன்று குரு பெயர்ச்சி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு, கணபதி ேஹாமம், நவகிரக ேஹாமம், கோ பூஜை, மகாலட்சுமி ேஹாமம் நடக்கிறது. சுவாமிக்கு சுண்டல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.மாலை 5:19 மணிக்கு, குருசாந்தி ேஹாமம், நவகிரக சாந்தி ேஹாமம், நட்சத்திர ேஹாமம், ராசி பரிகார ேஹாமம், தட்சிணாமூர்த்தி ேஹாமம் நடக்கிறது. தொடர்ந்து, குரு பகவானுக்கு 1,008 லிட்டர் பால் அபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, சிதம்பர கீதாராம் குருக்கள், கீதாசங்கர குருக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ