உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாட்டை ஈட்டியால் குத்திய நபர் கைது

மாட்டை ஈட்டியால் குத்திய நபர் கைது

புதுச்சேரி: மாட்டை ஈட்டியால் குத்தியவரை மிருகவதை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். அப்பகுதியில் அவர் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். மாடுகள், வயல்கள் வழியாக, அருகில் உள்ள வாய்க்காலில் இறங்கி சென்றது. அதை பார்த்த, வயல்களை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜவேலு, கூர்மையான ஈட்டியால் பசு மாட்டின் உடலில் குத்தினார். பசு மாட்டின் உடலில் பலத்தம் காயம் ஏற்பட்டது. ஏன் மாட்டை ஈட்டியால் குத்தினாய் என, சுப்ரமணி கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து, சுப்பிரமணி, புதுச்சேரி விலங்கு நல வாரியம் மற்றும் வில்லியனுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, மிருகவதை சட்டத்தின் கீழ், ஜெயராஜவேலுவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை