மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
புதுச்சேரி: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் யுனிசிஸ் இன்னோவேஷன் புரோகிராம் என்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.தேசிய அளவிலான யுனிசிஸ் இன்னோவேஷன் புரோகிராம் போட்டி அன்மையில் நடந்தது.இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் கலைவாணி,அக் ஷயா, இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மாணவர்கள் ஹேமச்சந்தர், ஹேமாபுஷ்பவதி ஆகியோர் பங்கேற்றனர்.அதி நவீன கட்டிங் எட்ஜ் வீடியோ தொழில்நுட்பம் என்ற தலைப்பில் புதுமையான திட்டத்திற்காக மூன்றாம் பரிசைப் பெற்றனர். வீடியோ பகுப்பாய்விற்கான மேம்பட்ட நுட்பங்களைக் காண்பிக்கும் இத்திட்டம், நடுவர்களைக் கவர்ந்தது மட்டுமின்றி, பெங்களூரில் உள்ள யூனிசிஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப்புடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசை வென்றனர்.எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ராஜா, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறை தலைவர் பிரேம்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டனர். சாதித்த மாணவர்களை மணக்குள விநாயகர் கல்லுாரி குழு தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டினர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago