உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம்

கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம்

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் சுத்துக்கேணி உழவர் உதவியகத்தில் கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். ஆத்மா திட்ட துணை அதிகாரி கலைச்செல்வி, ஆத்மா திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவர் வருண், கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம், தற்போதைய நவீன தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். முகாமில் சுத்துக்கேணி, கொடாத்துார் பகுதிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம், கிராம விரிவாக்க பணியாளர்கள் ஆதிநாராயணன், ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்