உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா

புதுச்சேரி, ஆலமரத்துக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா வரும் 12ம் தேதி நடக்கிறது.பாக்கம் கூட்ரோடு அடுத்த ஆலமரத்துக்குப்பம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், பரிமளரங்கநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா வரும் 12ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி தீபாரதனை, மாலை 5 மணிக்கு முதல் காலயாக பூஜை நடக்கிறது.வரும் 11ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, விமானம் கலசம் படிய வைத்தல், மாலை 5.00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் காலயாக பூஜை, வரும் 12ம் தேதி காலை 6.00 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, நாடி சந்தனம், 9.00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9.30 மணிக்கு கடம் புறப்பாடு, 10.00 மணிக்கு விமான கும்பாபிேஷகம், 10.15 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடக்கிறது.11.00 மணிக்கு மகா தீபராதனையும், இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை