உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாயை புலியாக்கிய மர்ம நபர்கள்; புதுச்சேரியில் பரபரப்பு

நாயை புலியாக்கிய மர்ம நபர்கள்; புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் தெரு நாய்க்கு புலி போல வர்ணம் பூசி தெருவில் திரியவிட்ட மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாடியது. அடுத்த சில நாட்களில் அரியலுாரில் சிறுத்தை நடமாடும் வீடியோ வெளியானது.இரு இடங்களிலும் சிறுத்தை இதுவரை பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் நேற்று முன்தினம் இரவு புலி போன்ற உருவம் சாலையில் நடமாடுவதை கண்டு பொதுமக்கள் பதறினர்.அருகில் சென்று பார்த்தபோது, தெரு நாய் ஒன்றுக்கு புலி போல வர்ணம் பூசி சாலையில் விட்டுள்ளது தெரியவந்தது.புலி வேஷம் போடப்பட்டுள்ள நாய், தெருக்கள் வழியாக நடந்து செல்லும்போது முதியோர் மற்றும் குழந்தைகள் புலி எனநினைத்து நடுங்குகின்றனர். வாகன ஓட்டிகள் சிலர் முதலில் சாலையில் புலி நடமாடுகிறதா என பதறினர். அருகில் சென்ற பின்பே நாய் என தெரிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.புலி வேடமிட்ட நாய் குறிஞ்சி நகர் பகுதியில் உலா வருவதை அறிந்து ஒரு தரப்பு நகைச்சுவையாக எடுத்து கொண்டுள்ளது.மற்றொரு தரப்பினர் குழந்தைகள், முதியோர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் புலி போல நாய் மீது வர்ணம் பூசி இருப்பது தவறானது என தெரிவிக்கின்றனர். புலி போல வர்ணம் பூசிய நாய் உலா வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ