உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுலா வந்துள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., புதுச்சேரிக்கு தேவையா? எதிர்க்கட்சி  தலைவர் சிவா சரமாரி கேள்வி

சுற்றுலா வந்துள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., புதுச்சேரிக்கு தேவையா? எதிர்க்கட்சி  தலைவர் சிவா சரமாரி கேள்வி

புதுச்சேரி : மக்கள் பணி செய்யாமல் சுற்றுலா போல வந்துள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., புதுச்சேரிக்கு தேவையா என்று எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்எதிர்க்கட்சி தலைவர் சிவா: புதுச்சேரிக்கு தனியாக தேர்வாணையம் அமைக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? புதுச்சேரி தேவைக்கு அதிகமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் ஆட்சேபனை ஏதேனும் தெரிவிக்கப்பட்டுள்ளதா?முதல்வர் ரங்கசாமி: மாநிலத்தில் தற்போது 14 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், 9 ஐ.பி.எஸ்., அதிகாரியும் பணியாற்றி வருகின்றனர். டி.ஜி.பி., பதவி டில்லி நிர்வாகத்தின் கணக்கில் அடங்கும். இந்த அதிகாரிகள் சட்டத்திற்குட்பட்டே நியமிக்கப்படுகின்றனர். எனவே ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.எதிர்க்கட்சி தலைவர் சிவா: கடந்த 1996 ஆண்டு காங்., ஆட்சி காலத்தில் குறைவாக இருந்தனர். ஆனால் வேலை நடந்தது. இப்போது அதிகமாக அதிகாரிகள் இருந்தும், அப்போது நடந்த வேலை கூட நடக்கவில்லை. இவர்களால் அரசுக்குதான் செலவு. முதல்வர் ரங்கசாமி: யாரெல்லாம் வேலை செய்கின்றார்களோ அவர்களிடம் வேலை வாங்குகின்றோம். வேலை செய்யும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் இருக்கின்றனர்.எதிர்கட்சி தலைவர் சிவா: இங்கு வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாநிலம் சுற்றுலா இடம்போல், விருந்தினர் மாளிகை போல் ஆகிவிட்டது. இங்கு அவர்கள் மக்களுக்கு பணியாற்ற வரவில்லை. 5 அதிகாரிகளை தவிர்த்து பார்த்தால் எல்லோரும் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் போல் இருக்கின்றனர். அதிகாரிகளை தேடி சென்றாலும் சந்திப்பது கூட இல்லை. அந்த சீட்டில் கூட இல்லை. வெளிநாடு சென்றவர்கள் உள்ளனர். அந்த லிஸ்ட் தரவா.வைத்தியநாதன்(காங்.,): மக்கள் பிரதிநிதியான நாங்கள் மக்கள் பணிக்கு ஆட்களை கேட்டால் தர மறுக்கின்றீர்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வீட்டில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் தெரியுமா.. ஒவ்வொரு வீட்டில் 10 பேராவது வேலை செய்கின்றனர்.நாஜிம்(தி.மு.க.,): நம் பக்கத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி அனைத்தையும் பார்க்கிறார். ஆனால் இங்கு 26 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வேலை செய்யவில்லை. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ