உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவனை தாக்கிய மூவருக்கு வலை

சிறுவனை தாக்கிய மூவருக்கு வலை

வில்லியனுார் : உழவர்கரை, அம்பேதகர் நகரை சேர்ந்த யோகநாதன் மகன் ரிஷி,16; பெயிண்டர் வேலை செய்துவந்தார்.இவர் நேற்று முன்தினம் மாலை ரிஷி தனது நண்பர்களுடன் ஒதியம்பட்டு தாங்கல் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற உழவர்கரை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆரோன் இருவரும் சேர்ந்து ரிஷியிடம் தகராறு செய்து தாக்கினர்.பின் மீண்டும் ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஆரோன் மற்றும் பிரகாஷ் ஆகிய மூவரும் ரிஷி வீட்டுக்கு வந்து ரிஷி வெளியே அழைத்து தாக்கினர். படுகாயமைடைந்த ரிஷியை உடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி