உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அரசை கண்டித்து டிராக்டர் பேரணி புதுச்சேரி விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து டிராக்டர் பேரணி புதுச்சேரி விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

புதுச்சேரி: விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் ஏதும் இல்லை என, புதுச்சேரி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.சங்க தலைவர் கீதநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்காக எந்த விதமான அதிகப்படியான நிதி ஒதுக்கீடு இல்லை. 1.52 லட்சம் கோடி மட்டும் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 80 சதவீத விவசாயத் துறைக்கு சொற்ப அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கேட்டு மூன்று ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.அரசு ஏற்றுக்கொண்ட குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக இயற்றப்படும் என்ற அறிவிப்பையும் மத்தி அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது. உரம் மானியம் அதிகரிக்கவில்லை. உரம் விலை குறைப்பு இல்லை.இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்ற இந்த பட்ஜெட்டில் அதற்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. இயற்கை விவசாயம் செய்தால் விவசாயிகள் ஊக்கப்படுத்துவார்கள் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இல்லை. ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான பட்ஜெட் அறிவிப்பு எதுவும் இல்லை.இதனால், மத்திய அரசை கண்டித்து சுதந்திர தினத்தன்று டில்லி மற்றும் நாடு முழுதும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த இருக்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை