உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க பணியாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க பணியாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை

புதுச்சேரி: ரேஷன் கடை திறப்புக்காக ஆயத்தப் பணிகளை புதுச்சேரி நியாய விலை கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்கம் துவங்கியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டது.அதன்பின்னர் கொரோனா காலத்தில் பள்ளிகள், சமுதாய கூடம் மூலம் அரிசி வழங்கப்பட்டது. ரேஷன்கடைகள் மூடலால்,பயனாளிகளுக்கு வங்கி கணக்கு மூலம் மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் என்.ஆர்.காங்.,பாஜ.,ஆளுங்கட்சி கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைந்ததற்கு ரேஷன் கடை திறக்காததும் ஒரு காரணமாக கூறப்பட்டது.மேலும் எதிர்கட்சிகளின் போராட்டம் உள்ளிட்டவைகளால் ரேஷன் கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு எடுத்தது.அதைதொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் திறப்பதற்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். அதையொட்டி நேற்று புதுச்சேரி நியாய விலை கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 328 ரேஷன் கடைகளில் பணியில் இருந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் சீனியர் கூட்டுறவு துறை அதிகாரி வேல்முருகன் தலைமையில் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில், தற்போது மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளின் நிலை, ஊழியர்களின் சம்பள பாக்கி உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளுக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறப்பதற்கானபணிகள் வேகமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி