உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சச்சரவுகள் எதிரணிக்கு சாதகமாகிவிடக் கூடாது ஓம் சக்தி சேகர் கோரிக்கை

சச்சரவுகள் எதிரணிக்கு சாதகமாகிவிடக் கூடாது ஓம் சக்தி சேகர் கோரிக்கை

புதுச்சேரி : தே.ஜ., கூட்டணிக்குள் ஏற்படும் சிறு சிறு சச்சரவுகளால் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு சாதகமாகி விடக்கூடாது என, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:தே.ஜ., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் அனைவரும் வரும், 2026 சட்டசபை தேர்தலிலும், நமது கூட்டணி அரசே மீண்டும் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். சிறப்பான முறையில் நடந்து வரும் ரங்கசாமி ஆட்சியில், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களால், எந்த வித நன்மையும் தீமையும் கிடையாது. சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் வேண்டுமானால், பா.ஜ.,விற்கு ஆதரவாக செயல்படலாம். ஆனால், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் கருத்துக்களை கேட்டு, ஆட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது கூட்டணி தர்மத்திற்கு ஏற்றது இல்லை.ஆட்சியில் நிலவும் குறை மற்றும் நிறைகளை எடுத்து சொல்ல பா.ஜ.,விற்கு உரிமை உண்டு. ஆனால் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களை வைத்துக்கொண்டு அரசுக்கு அவபெயர் ஏற்படும் செயல்களில் ஈடுபடுவது நல்ல கூட்டணிக்கு அழகல்ல. ஆகையால் ஆட்சிக்கு உறுதுணையாக பா. ஜ., இருக்க வேண்டும். வரும் 2026ல் நடைபெற உள்ள பொது தேர்தலில் முதல்வர் ரங்கசாமியோடு, கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு செயல்பட வேண்டும். ஏனெனில் கூட்டணிக்குள் ஏற்படும் சிறு சிறு சச்சரவுகள் எதிர்க்கட்சி கூட்டணிக்கு சாதகமாக அமைய விடக்கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ