உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கூடம்

இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கூடம்

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் கண், சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் கட்டும் பணி நடந்து வருகிறது.மத்திய அரசின் 1.5 கோடி நிதி, மாநில அரசின் 32 லட்சம் ரூபாய் நிதியுடன் சேர்த்து, ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கண், சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் மூன்றாவது மாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.இந்த அறுவை சிகிச்சை மைய கூடம் முழுதும் ஏ.சி., பொருத்தப்பட்டுள்ளது. இங்கு விரைவில் அதிநவீன சிகிச்சை கருவிகள் அமைக்கப்பட உள்ளது. இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் சிறுநீரகம் மற்றும் கண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.இதில் 26 பேருக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டுள்ளது. இடையில் சில காலம் நிறுத்தப்பட்ட இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் 2022 முதல் துவங்கி நடந்து வருகிறது.அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு எவ்வித கட்டணமும் இல்லாததால் ஏழை நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த அறுவை சிகிச்சை கூடம் அமைகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தை தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு இயக்குனர் அனில் குமார் ஆய்வு செய்தார்.விரைவாக இந்த அறுவை சிகிச்சை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மருத்துவமனை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை