உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அக் ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு

அக் ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுச்சேரி: பிரதான் மந்திரி போஷன் அபியான் திட்டத்தின் கீழ், 4 பில்லியன் உணவுகள் என்ற மைல்கல்லை எட்டியதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் அக் ஷய பாத்ரா அறக்கட்டளையின் பணியை பிரதமர் மோடி பாராட்டினார்.இதேபோல், நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, என்.ஆர் நாராயண மூர்த்தி ஆகியோர் அறக்கட்டளையின் முயற்சிகளைப் பாராட்டினர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற 'உணவுப் பாதுகாப்பில் சாதனைகள்: நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றம்' என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில், பசியற்ற நாட்டை நோக்கிய இந்தியாவின் துணிச்சலான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியது.பிரதமர் நரேந்திர மோடி ஊக்கமளிக்கும் செய்தியில் கூறியிருப்பதாவது; இந்திய கலாசாரத்தில் ஊட்டச்சத்து மற்றும் சமூகத்தின் மதிப்புகளை, 4 பில்லியன் உணவுகளை வழங்கும் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதற்காக அக் ஷய பாத்ரா அறக்கட்டளையின் குழுவை நான் வாழ்த்துகிறேன். நமது கலாசாரத்தில் உணவு கொண்டிருக்கும் உள்ளார்ந்த மதிப்பை நாம் பிரதிபலிக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை