உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரையில் போலீசார் துப்புரவு பணி

கடற்கரையில் போலீசார் துப்புரவு பணி

புதுச்சேரி: போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, கடற்கரையில் சட்டம் ஒழுங்கு போலீசார் துாய்மை பணி மேற்கொண்டனர்.புதுச்சேரி போலீஸ் சட்டம் ஒழுங்கு பிரிவு சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஐ.ஜி, அஜித்குமார் சிங்ளா தலைமை தாங்கினார்.போலீசார் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து, கடற்கரை சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனரில், போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.கடற்கரை காந்தி திடலில் பின்புறம் உள்ள பகுதியில் போலீசார் துாய்மை பணியில் ஈடுபட்டனர். இதில், சீனியர் எஸ்.பி.,க்கள் நாரா சைதன்யா, கலைவாணன், எஸ்.பி.,க்கள் பக்தவச்சலம், வீரவல்லவன், வம்சிதரெட்டி, இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு செல்பி பாய்ன்டில் போலீசார் புகைப்படம் எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை