உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலதிபரை தாக்கிய 2 பேருக்கு போலீஸ் வலை

தொழிலதிபரை தாக்கிய 2 பேருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி: ரியல் எஸ்டேட் தொழிலதிபரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார், கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த், 40; ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவர் நேற்று முன்தினம் இரவு மைத்துனருடன் வில்லியனுாரில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.செங்கேணி அம்மன் கோவில் அருகே சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன், 32; கஜபதி, 31; ஆகியோர் வசந்தை வழிமறித்து, சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். வசந்த் புகாரின் பேரில் செல்வேந்திரன் உட்பட இருவர் மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை