உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் பார்வையாளர் திருக்கனுாரில் ஆய்வு

போலீஸ் பார்வையாளர் திருக்கனுாரில் ஆய்வு

திருக்கனுார் : திருக்கனுார் எல்லைப் பகுதி லோக்சபா தேர்தல் சோதனை சாவடியை போலீசார் பார்வையாளர் அமன்தீப் சிங் ராய் நேற்று பார்வையிட்டார். புதுச்சேரியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறையினர் மாநில எல்லைப் பகுதியில் சோதனை சாவடி அமைத்து, வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசாருக்கு தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு போலீஸ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு, அமன்தீப் சிங் ராய் நேற்று மதியம் 1:00 மணி அளவில் புதுச்சேரி எல்லைப் பகுதியான திருக்கனுாரில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதில், வாகன சோதனையின் போது எந்தவித பாரபட்சமும் இன்றி இவ்வழியாக செல்லும் அனைத்து மோட்டார் பைக், கார் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்டவை தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மேற்கு பகுதி எஸ்.பி., வம்சித ரெட்டி, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மற்றும் தேர்தல் துறையின் சோதனை சாவடி ஊழியர்கள், துணை ராணுவ படையினர் உடனிருந்தனர். பாகூர் : தொடர்ந்து பாகூரில் நேற்று காலை புதுச்சேரி - கடலுார் எல்லை பகுதியான முள்ளோடை, சோரியாங்குப்பம், மணமேடு ஆகிய பகுதியில் நடைபெறும் சோதனை பணிகளை பார்வையிட்டார். அப்போது, அங்கு மேற்கொள்ளப்படும் சோதனை குறித்த தகவல்களை பதிவு செய்துள்ள பதிவேடுகளை ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது, சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயக்குமார், நந்தக்குமார், மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ