உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசார் வாகன சோதனை

போலீசார் வாகன சோதனை

திருக்கனுார்: திருக்கனுார் எல்லைப் பகுதியில் போலீசார் சீருடையில் அணியும் வீடியோ கேமராவுடன் தீவிர வாகன சோதனையில்ஈடுபட்டனர்.புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாநில எல்லைப் பகுதிகளில் தேர்தல் துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக, திருக்கனுார் எல்லைப் பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சீருடையில் அணியும்பாதுகாப்பு வீடியோ கேமராவுடன் தீவிர வாகன சோதனை நடத்தினர்.அவ்வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, மதுபானங்கள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக பணம் கொண்டு செல்லப்படுகிறதா, என்பது குறித்து சோதனை நடத்தினர்.இதேபோல், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார், சீருடையில் அணியும் வீடியோ கேமராவுடன், எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி