உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊசுடு தொகுதியில் 3 மையங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்

ஊசுடு தொகுதியில் 3 மையங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்

வில்லியனுார், : ஊசுடு தொகுதியில் மூன்று மையங்களில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப் பதிவு துவங்கியது.ஊசுடு தொகுதி சேதராப்பட்டு புதுக்காலனி பகுதியில் உள்ள 4ம் எண் ஓட்டுச் சாவடி, தொண்டமாநத்தம் சமூதாயநல கூடத்தில் உள்ள 4ம் எண் ஓட்டுச் சாவடி, சேந்தநத்தம் அரசு ஆரம்பப்பள்ளி 31ம் எண் ஓட்டுச்சாவடியில் இருந்த மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை. இதனால், வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர்.தொடர்ந்து இரண்டு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டன. ஒரு இடத்தில் மாற்று இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதனால், இம்மையங்களில் ஓட்டுப் பதிவு 1 மணி நேரம் தாமதமாக துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை