உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடி மின்னலுடன் திடீர் மழை 3 மணி நேரம் பவர் கட்

இடி மின்னலுடன் திடீர் மழை 3 மணி நேரம் பவர் கட்

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்ததாதல் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக சுட்டெரித்த வெயிலால் மக்கள் அவதிப்பட்டனர். கடந்த 4 நாட்களாக வெயில் சதம் அடித்த வந்த நிலையில், நேற்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.இரவு 9:00 மணி முதல் நெட்டபாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. பண்டசோழநல்லுார் கிராமத்தில் நேற்று இரவு 9:00 மணி முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக 3:00 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது. திடீர் கனமழையால் வெயிலின் உஷ்ணம் குறைந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இதே போல், புதுச்சேரி, அரியூர், வில்லியனுார் உட்பட பல பகுதிகளிலும் 3 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி