உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்கம்பம் உடைந்ததால் மின் விநியோகம் பாதிப்பு 

மின்கம்பம் உடைந்ததால் மின் விநியோகம் பாதிப்பு 

திருக்கனுார் : செட்டிப்பட்டில் நேற்று வீசிய சூறைக்காற்று காரணமாக சிமென்ட் மின்கம்பம் உடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புதுச்சேரியை அடுத்த திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று காலை சூறைக்காற்று வீசியது. அப்போது, செட்டிப்பட்டு திரவுபதி அம்மன் கோவில் அருகே இருந்த சிமென்ட் மின்கம்பம் ஒன்று சூறைக்காற்றில் முற்றிலும் உடைந்து கீழே விழுந்தது. இதனால், மின்கம்பிகள் அறுந்து விழுந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.தகவலறிந்த திருக்கனுார் மின்துறை ஊழியர்கள் உடைந்து விழுந்த மின் கம்பத்தை மாற்றியமைத்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பல மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ