உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.எஸ்.எஸ்., மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

என்.எஸ்.எஸ்., மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

புதுச்சேரி, : பாரதிதாசன் மகளிர் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கினார். மாநில நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி சதிஷ்குமார் நாட்டுநலப்பணித்திட்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில், மகிழ்ச்சி மற்றும் வெற்றி அகாடமி உதவியாளர் பூரணி, வாழ்க்கை திறன்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சிகான சான்றிதழை, 407 மாணவிகளுக்கு வழங்கினார். வால்வெனெட் டெக்னாலஜி சார்பில், மேலான் இயக்குனர் விஜய்பாபு, 30 மாணவிகளுக்கு ப்ரண்ட் - எண்ட் பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பேசினார்.ஏற்பாடுகளை, கல்லுாரி வேலை வாய்ப்பு செல், மகிழ்ச்சி மற்றும் வெற்றி அகாடமி வால்வெனெட் டெக்னாலஜி மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஆரோக்கியமேரி, ராஜலட்சுமி, பேராசிரியர் ரங்கசாமி, வேலை வாய்ப்பு துறை அலுவலர் சாய்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ