உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காய்கறி, பழங்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: நகர மாவட்ட பா.ஜ., தலைவர் கோரிக்கை

காய்கறி, பழங்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: நகர மாவட்ட பா.ஜ., தலைவர் கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பா.ஜ., நகர மாவட்ட தலைவர் சக்தி கிருஷ்ணராஜ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:மக்களின் அன்றாட தேவைகளான காய்கறிகள், பழங்கள். சூப்பர் மார்க்கெட், உழவர் சந்தை, மார்கெட், சாலையோரங்களில் விற்கப்படுகிறது. காய்கறிகள், பழங்கள் கிராமப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டு, நகர பகுதிகளுக்கு வாகனம் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனை வாங்கிச் செல்லும் கடை வியாபரிகள் அதிக விலையில் விற்கப்படுகின்றனர்.குறிப்பாக குளிர்சாதன வசதி கொண்டு விற்பனை செய்யும் காய்கறி கடைகளில் விலையை 3 மடங்கு உயர்த்தி விற்பனை செய்கிறார்கள். இதனை கூடுதல் பணம் செலுத்தி மக்கள் வாங்கி செல்கின்றனர். உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரிய அளவில் லாபம் அடைவதில்லை. இதனால் காய்கறிகள், பழங்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அதன் பலன் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு சரியான முறையில் சென்றடையும். மக்களும் அரசு நிர்ணயித்த விலையில் காய்கறி, பழ வகைகளை வாங்கி செல்வார்கள். இதனை புதுச்சேரி அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி