| ADDED : ஆக 03, 2024 11:44 PM
புதுச்சேரி: விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.நெல்லிதோப்பு, பெரியார் நகர், மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.பட்டதாரி ஆசிரியை அனுசுயா தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் துரை வரவேற்றார். தலைமையாசிரியர் ஜான்சி சிறப்புரையாற்றினார். ரிச்சர்ட்ஸ் எம்.எல்.ஏ., கல்வித்துறை பெண் கல்வி துணை இயக்குனர் சிவராமரெட்டி, விளையாட்டுத்துறை துணை இயக்குனர் வைத்தியநாதன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டினார்.முன்னதாக, மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை, மாணவர் டைரி, மாணவர் அடையாள அட்டை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை ஆசிரியை ஹேமாவதி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தேவி கன்னியாகுமாரி, வடிவுக்கரசி, சுனிதா மற்றும் குணசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் அய்யனார் நன்றி கூறினார்.