உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

சாராயக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

திருக்கனுார்: சுத்துக்கேணியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாராயக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி - காட்டேரிக்குப்பம் செல்லும் சாலையில் சாராயக்கடை அமைந்துள்ளது. இதன் அருகே குடியிருப்புகள் மற்றும் கோவில்கள் உள்ளன. அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள், சாராயக்கடைக்கு வரும் குடிமகன்களால் தினமும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இதையடுத்து, சாராயக் கடையை அகற்றக்கோரி கலால் துறையிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.இதற்கிடையே, இந்த சாராயக் கடைக்கான புதிய ஏலம் வரும் 29ம் தேதி கலால் துறை மூலம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.இதைக்கண்டித்து, சாராயக்கடைக்கு இந்தாண்டு ஏலம் விடக்கூடாது என வலியுறுத்தியும், சாராயக்கடையை உடனடியாக அகற்றக்கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் சுத்துக்கேணி 4 முனை சாலை சந்திப்பு அருகே நேற்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து கலால்துறை உயர் அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை