உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது பார்வையாளர், காவல் பார்வையாளர் வருகை; தேர்தல் விதிமீறல் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் மொபைல் எண்கள், இ- மெயில் ஐடி வெளியீடு

பொது பார்வையாளர், காவல் பார்வையாளர் வருகை; தேர்தல் விதிமீறல் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் மொபைல் எண்கள், இ- மெயில் ஐடி வெளியீடு

புதுச்சேரி : புதுச்சேரிக்கான பொது பார்வையாளர்,காவல் பார்வையாளரிடம் லோக்சபா தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி லோக்சபா தேர்தல் பொது பார்வையாளராக ஜம்மூ காஷ்மீரை சேர்ந்த பியூஷ் சிங்லா,காவல் பார்வையாளராக ஐ.பி.எஸ்.,அதிகாரி அமர்தீப் சிங் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.இருவரும் நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்து,தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் நேரில் சென்று,ஆலோசனை நடத்தினர்.இவர்கள், புதுச்சேரியில் முகாமிட்டு லோக்சபா தேர்தல் பணிகளை கவனிக்க உள்ளனர்.வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ள சூழ்நிலையில்,போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறல்கள்,குறைகள்,புகார்கள் இருந்தால் இவர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.பொது பார்வையாளர் பியூஷ் சிங்லா கோரிமேடு ஜிப்மர் விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு தேர்தல் புகார்களை பெற உள்ளார். அவரிடம், 9486172753 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.இதேபோல் புதுச்சேரி ஒயிட் டவுன் போலீஸ் விருந்தினர் மாளிகை டி.ஜி.பி.,சூட் அலுவலகத்தில் தங்கும் காவல் பார்வையாளர் அமர்தீப் சிங் ராய்யிடம் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை 9486288092 என்ற எண்ணில் தேர்தல் விதிமுறை மீறல்களை தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்.இல்லையெனில் 0413-2250056 என்ற அலுவலக தொடர்பு எண், gmail.comஎன்ற இமெயில் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை