உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்னை ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி தி.மு.க., இலக்கிய அணி பங்கேற்பு

சென்னை ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி தி.மு.க., இலக்கிய அணி பங்கேற்பு

புதுச்சேரி : சென்னையில் நடந்த தி.மு.க., இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் புதுச்சேரி இலக்கிய அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தி.மு.க.,இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலத்தில் நடந்தது.மாநில இலக்கிய அணிச் செயலாளர் கலைராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இலக்கிய அணி நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.இக்கூட்டத்தில், புதுச்சேரி மாநில இலக்கிய அணி அமைப்பாளர் சீனுமோகன்தாசு தலைமையில் நிர்வாகிகள் ஆளவந்தார், தர்மராஜன், சோமசுந்தரம், கோதண்டபாணி, கலிவரதன், கலிமுல்லா, ஜபருல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்