உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண்ணன் மறைவுக்கு ராஜ்யசபாவில் இரங்கல்

கண்ணன் மறைவுக்கு ராஜ்யசபாவில் இரங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி முன்னாள் எம்.பி., கண்ணன் மறைவிற்கு ராஜ்யசபாவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.புதுச்சேரி அரசில் சபாநாயகர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த கண்ணன், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பணியாற்றினார். புதுச்சேரியில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக திகழ்ந்த கண்ணன், கடந்தாண்டு நவம்பர் 5ம் தேதி காலமானார்.முன்னாள் எம்.பி.,யான கண்ணன் மறைவுக்கு, ராஜ்யசபாவில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை, ராஜ்யசபாவின் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் வாசித்தார். தொடர்ந்து, உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

நன்றி

ராஜ்சபாவில், முன்னாள் எம்.பி., கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு, கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை