| ADDED : மே 08, 2024 01:37 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தே.ஜ கூட்டணி அரசு, மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், காங்., மற்றும் தி.மு.க ஆகிய பிரதான கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியை வீழ்த்தி என். ஆர்.காங்., பா.ஜ மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய, தே.ஜ கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, தே.ஜ கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார்.அந்த கூட்டணி அரசு பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது. தற்போது கூட்டணி அரசு, நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதை பாராட்டும் விதமாக முதல்வர் ரங்கசாமிக்கு, பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து சபாநாயகர் செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.