உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் பழைய காலனியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருக்கு அரசு இலவச மனைப்பட்டா வழங்கியது. ஏகாம்பரத்துடன் அவரது மகள் சுந்தரி, மருமகன் வெள்ளிக்கண்ணு வசித்தனர்.ஏகாம்பரம் இறந்த நிலையில், அவரது இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் அவரது பெயருக்கு மாற்றம் செய்து ஆக்கிரமித்தார். இது குறித்து சுந்தரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் இடத்தை மீட்டு சுந்தரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி சுந்தரியிடம் இடத்தை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை