மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
18 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
18 hour(s) ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
18 hour(s) ago
வாய்க்கால் அமைக்கும் பணி
18 hour(s) ago
புதுச்சேரி: வருமான சான்றிதழ்கள் பெறுவதை இணையவழியில் செயல்படுத்திட வேண்டும் என, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்க தலைவர் கவுசிகன் அறிக்கை:நான்கு ஆண்டுகளுக்கு முன், அரசு, ஒரு இணையவழி சேவையை துவக்கி, இணையத்தில் விண்ணப்பித்து, சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவித்தது. ஆனால் அதனை முழுமையாக செயல்படுத்தவில்லை. விண்ணப்பங்களை நேரில் எடுத்து வர வேண்டும் என, மீண்டும் அலைக்கழிக்கின்றனர். இது மாணவர்களையும், பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது மட்டுமின்றி லஞ்சம் கொடுத்து சான்றிதழ் பெறும் நிலைக்கு வழி வகுக்கிறது. இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.எனவே எந்த காரணத்தினால் இணையவழியில் சான்றிதழ்களை வழங்க முடியவில்லை என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் சான்றிதழ் வழங்குவதற்கான இடர்பாடுகளை களைந்து லஞ்சம், அரசியல் சிபாரிசு போன்ற குறுக்குவழிகளை ஒழித்திட வேண்டும். வெளிப்படைத் தன்மையோடு இணையவழியில் சான்றிதழ்களை பெற்றிடும் சேவையை அரசு முழுமையாக செயல்படுத்திட வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago