மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
6 hour(s) ago
பாகூர், : மதுக்கடையை தேடி சென்ற போது, ஆற்றில் பாய்ந்து மூழ்கிய கார், கிரேன் மூலம் மீட்கப் பட்டது. கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு கடலுார் சாவடி பகுதியில் நடந்த உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின், அவர்கள் அனைவரும் மது அருந்துவதற்காக, புதுச்சேரி பகுதியான கொம்மந்தான்மேடு கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தனர்.இதையடுத்து, இரவு 9:00 மணியளவில், சாவடியில் இருந்து வேகனார் காரில் புறப்பட்ட அவர்கள், கடலுார் கலெக்டர் அலவலகம் எதிரே உள்ள தென்பெண்ணையாற்று தரைப்பாலத்தின் வழியாக கொம்மந்தான்மேடு கிராமத்தில் உள்ள மதுக்கடையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஏற்கனவே, தரைபாலத்தின் வடக்கு கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு திறந்த வெளியாக இருக்கும் நிலையில், மழை பெய்து கொண்டிருந்ததால் அதனை கவனிக்காமல் வேகமாக சென்றனர். ஒரு கட்டத்தில், சாலை துண்டிக்கப்பட்ட நிலையில், எதிரே பெரிய அளவில் பள்ளம் இருப்பதை அறிந்த டிரைவர் காரை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். அதற்குள் கார், ஆற்றினுள் பாய்ந்து நீரில் மூழ்கியது.நீர் மட்டம் குறைவாக இருந்ததால், உள்ளே இருந்த 5 பேரும் லேசான காயங்களுடன் நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பினர். இதையடுத்து, நேற்று காலை ஆற்றில் மூழ்கி இருந்த கார், கிரேன் மூலமாக மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago