உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமாயணத்தை இழிவுபடுத்திய நபர்களை கைது செய்ய தீர்மானம்

ராமாயணத்தை இழிவுபடுத்திய நபர்களை கைது செய்ய தீர்மானம்

புதுச்சேரி : புதுச்சேரியில், ராமாயணத்தை இழிவு படுத்திய மத்திய பல்கலை இடதுசாரிகளை கைது செய்ய வேண்டும் என, இந்து முன்னணி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாநில இந்து முன்னணி செயற்குழு கூட்டம், வெங்கட்டா நகர், இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் சனில்குமார் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் செந்தில் முருகன், மாநில செயலாளர்கள் மணிவண்ணன், சிவமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர்கள் நாராயணன், ஜெயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பஞ்சாயத்து கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ராமாயணத்தை இழிவு படுத்திய மத்திய பல்கலை இடதுசாரிகளை கைது செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். புதுச்சேரியில், சி.பி.எஸ்.சி., கல்வி முறையை அமல்படுத்திய, அரசிற்கு பாராட்டுகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ