உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 100 கோடியில் கட்டுப்பாட்டு மையம்

ரூ. 100 கோடியில் கட்டுப்பாட்டு மையம்

ஸ்மார்ட் சிட்டி சார்பில், கடலுார் சாலை ஏ.எப்.டி., மில் அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ரயில்வே துறையுடன் இணைந்து ரூ. 71.40 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி அரசின் பங்கு ரூ. 53.55 கோடி ரயில்வே துறையிடம் வழங்கப்பட்டு ஒப்பந்த புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கும்.நகர பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து 40 ஆண்டிற்கு மேல் ஆகிறது. அதனால் அதன் செயல்பாட்டை ஆராய்ந்து, தேவையான பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் புனரமைப்பு செய்ய ரூ. 52.50 கோடி மதிப்பில் டெண்டர் விட்டு பணிகள் விரைவில் துவங்கும்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ரூ. 100 கோடி மதிப்பில் நடந்து வரும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு கட்டளை மையம் அமைக்கும் பணி டிசம்பரில் முடிவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை