உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் டூ வீலர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் டூ வீலர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

புதுச்சேரி : 'உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் இருசக்கர வாகனங்கள் ரூ.10 ஆயிரம் அபராதத்துடன், பறிமுதல் செய்யப்படும்' என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிமம் பெறாமல் சிலர் இருசக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு வாடகைக்கு விடுவதாக, போக்குவரத்து துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, சைக்கிள் ஸ்டோர் என்ற பெயரில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடத்தப்படும் இத்தகைய செயல்கள் மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு முரணானது. இதுகுறித்து போக்குவரத்து துறை தொடர்ச்சியாக பல முறை எச்சரித்துள்ளது. உரிமம் பெற்ற இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பெறுவதற்கான விண்ணப்பங்கள் போக்குவரத்து துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.வாடகை மோட்டார் சைக்கிள் உரிமம் பெற விரும்புபவர்கள் தாங்களாக முன் வந்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்து உரிமம் பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். எனவே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை உரிமம் பெறாமல் வாடகைக்கு விடுவது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட பிரிவு 192ன் படி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவது மட்டுமின்றி, அபராத தொகையாக ஒரு மோட்டார் சைக்கிளுக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும். அத்தகைய வாகனங்கள் பற்றி முன்னரே அறிந்திராத புதிய நபர்களும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களும் வாடகை வாகனங்களை இயக்கும்போது விபத்துக்களும் ஏற்படுகிறது.எனவே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை போக்குவரத்து துறையின் உரிய உரிமம் பெற்ற பின் வாடகைக்கு விடுமாறு வாகன உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். அவ்வாறு உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் சட்ட விரோத வாகன பயன்பாட்டில் ஈடுபட வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை