உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவிலியரிடம் ரூ.1.43 லட்சம் அபேஸ்

செவிலியரிடம் ரூ.1.43 லட்சம் அபேஸ்

விழுப்புரம் : செவிலியரிடம் ஆன்லைனில் ரூ.1.43 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அருகே உள்ள கண்டாச்சிபுரம் அடுத்த காரணை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் இளவரசி, 23; செவிலியர். இவர், கடந்த 9ம் தேதி தனது மொபைல் போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியபோது, பகுதிநேர பணி என வந்த லிங்க்கில் சென்றார். அதனைத் தொடர்ந்து இளவரசியை, டெலிகிராமில் தொடர்பு கொண்ட மர்ம நபர், சிறிய தொகை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பினார்.அந்த லிங்கில் சென்ற இளவரசி தனக்கான யூசர் ஐ.டி., பாஸ்வோர்டை உருவாக்கி ரூ.1,000ம் செலுத்தி ரூ1,600ம், ரூ.2,000 செலுத்தி ரூ.2.800 பெற்றார். அதனால் நம்பிக்கை பெற்ற இளவரசி, ரூ.1.43 லட்சத்தை செலுத்தி டாஸ்க்கை முடித்து பார்த்தபோது, அவருக்கான பணம் வரவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளவரசி கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி