| ADDED : ஜூலை 26, 2024 04:20 AM
புதுச்சேரி: நெல்லித்தோப்பு மார்க்கெட்டில், எடைகள் அளவைகள் மற்றும் இயந்திரங்கள் சரி பார்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.வணிகர்களின் நலன் கருதி அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களுக்கே சென்று சட்டமுறை எடை அளவைத்துறை ஆய்வாளர்கள் சிறப்பு முகாம் நடத்தி, எடை மற்றும் எடையளவு இயந்திரங்களை முத்திரையிட, கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டார்.அதன்படி, உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தேவதாஸ், செந்தில்குமார் ஆகியோர் தலைமை யில் நெல்லித்தோப்பு மார்க் கெட் பகுதியில் உள்ள கடைகளில் பயன்பாட்டில் இருக்கும் எடையளவு இயந்திரங்கள், தராசு மற்றும் எடைக்கற்கள் ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்து சான்றிதழ் வழங்கினர். முகாமில் 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் சான்றிதழ் பெற்றனர்.வரும் 30ம் தேதி முதலியார்பேட்டை மார்க்கெட், 1ம் தேதி அரியாங்குப்பம் மார்க்கெட், வரும் 6ம் தேதி மதகடிப்பட்டு மார்க்கெட்டிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 முதல், மதியம் 12:30 மணி வரை நடக்கும் முகாமில் வணிகர்கள் தங்களுடைய எடை அளவைகள் மற்றும் எடையளவு இயந்திரங்களை உரிய தொகை செலுத்தி, அரசாங்க முத்திரை பதித்த சான்றிதழை பெற்று, கடைகளின் பார்வையான இடத்தில் வைக்கவேண்டும்.இந்த வாய்ப்பை வணிகர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளமாறு, சட்ட முறை எடை அளவைத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.