மேலும் செய்திகள்
பணி வழங்க கோரி நகராட்சி முற்றுகை
6 minutes ago
கைவினை திறன் பயிற்சி முகாம்
11 minutes ago
இன்று மக்கள் நீதிமன்றம்
12 minutes ago
அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் கவர்னரிடம் பா.ஜ., மனு
14 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவம், இன்ஜினியரிங், கலை, அறிவியல் உயர் கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 11 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக ஆண்டிற்கு 30 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.இந்த கல்வி உதவி தொகை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம், உயர் கல்வி துறை வளாகத்தில் நேற்று நடந்தது. உயர் கல்வித் துறை இயக்குனர் அமன் சர்மா தலைமை தாங்கினர். ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குனர் இளங்கோ முன்னிலை வகித்தார். அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கல்வித் உதவி திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி, அதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. கல்வி உதவி வராவிட்டால் சென்டாக்கிடம் கேட்க வேண்டும். மாணவர்களுக்கு நெருக்கடி தர கூடாது என, அறிவுறுத்தப்பட்டது.மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின இனத்தை சேர்ந்த ஏழை மாணவர்கள் படிக்க வருகின்றனர். இவர்கள் முதல் தலைமுறையினராக உள்ளனர். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை ஆதிதிராவிடர் துறை சென்டாக் வாயிலாக தருகிறது. அவர்களிடம் கல்வி கட்டணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தால் படிப்பினை பாதியில் கைவிடும் சூழலுக்கு தள்ளப்படுவர்.எனவே, அவர்களிடம் எந்த விதத்திலும் கூடுதல் கட்டணம் கேட்க கூடாது. இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை கண்காணிப்பாளர் பழனி, உதவியாளர் ஆனந்தராஜ், நல அதிகாரி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
6 minutes ago
11 minutes ago
12 minutes ago
14 minutes ago