உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மாணவர் கொலை வழக்கு சிறுவனின் தாயிடம் விசாரணை

பள்ளி மாணவர் கொலை வழக்கு சிறுவனின் தாயிடம் விசாரணை

காரைக்கால்: காரைக்காலில் மாணவர் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.காரைக்கால், திருப்பட்டினம் பகுதியில் தனது தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை தட்டி கேட்ட 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சகோதரனை, அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.இதையடுத்து நிரவி போலீசார், அந்த சிறுவன் மீது கொலை மற்றும் போக்சோ வழக்குப் பதிந்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புதுச்சேரி சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.இது குறித்து சீனியர் எஸ்.பி., மனிஷ் கூறுகையில், காரைக்காலில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டபோது அவரது வீட்டில் கொலையாளியின் தாய் இல்லை. இதனால் கொலையில் தாயிக்கு சம்பந்தமில்லை. இருந்தும் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ