மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம்-சொக்கம்பட்டு முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் - சொக்கம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தலாம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செடல் உற்சவம் கடந்த 6ம் தேதி துவங்கியது.அன்று காலை 10:00 மணிக்கு பூங்கரம் வீதியுலா, 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் செடல் அணிந்து, தேர், கார், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை அலகு குத்தி இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு மனிதனுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago