உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செடல் திருவிழா துவக்கம்

செடல் திருவிழா துவக்கம்

நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் 74ம் ஆண்டு செடல் மற்றும் தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனையொட்டி நேற்று காலை சாகை வார்த்தல் நடந்தது. இரவு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வரும் 8 ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் இரவு வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா வரும் 16ம் தேதி காலை 7:30 மணிக்கும், செடல் உற்சவம் மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விஸ்வநாதன் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி