உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடையை உடைத்து போன் திருட்டு

கடையை உடைத்து போன் திருட்டு

புதுச்சேரி : காலப்பட்டில் கடையை உடைத்து மொபைல் போன்களை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 39. இவர் பெரியகாலப்பட்டில் மொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த 27 ம் தேதி இரவு வியாபாரம் முடித்துவிட்டு, வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு சென்றபோது, கடை ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளே 13 பட்டன் மொபைல் போன்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. அவர் அளித்த புகாரின் பேரில், காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ