| ADDED : ஜூலை 15, 2024 02:11 AM
புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் சாலையோரம் புதிதாக கட்டப்பட்டுள்ள மழைநீர் வாய்க்கால் சிலாப் திடீரென உடைந்தது.புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், எம்.என் குப்பம் முதல் இந்திரா சிக்னல் வரையிலான 11.24 கி.மீ., சாலையை ரூ. 59.49 கோடி மதிப்பில் அகலபடுத்தி பலப்படுத்தவும், ஆரியப்பாளையத்தில் சரங்கராபரணி ஆற்றில்பாலம் கட்டும் பணி துவங்கியது.எம்.என்.குப்பம் முதல் அரும்பார்த்தபுரம் வரை 6.9 கி.மீ., கிராமப்புற சாலையைநான்கு வழிச்சாலை தரத்துடன் அமைக்கவும், மீதமுள்ள 3.4 கி.மீ துாரம் நகர்புற சாலையில், அகலப்படுத்த போதிய நிலம் இல்லாததால் தற்போது உள்ள சாலையோரம், 'ப' வடிவ மழைநீர் வடிகால் மற்றும் சென்டர் மீடியனுடன், தார் சாலை அமைக்கும் பணிநடந்து வருகிறது.வில்லியனுார் மூலக்கடை முதல் இந்திரா சிக்னல் வரை மழைநீர் வடிய கட்டிய 'ப'வடிவ வடிகால் கட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த மழையின்போது, சுல்தான்பேட்டை பெட்ரோல் பங்க் எதிரிலும்,அரும்பார்த்தபுரம் பத்மாவதி மருத்துவமனை அருகிலும் மழைநீர் வடிகால் வழியாக வடியாமல், சாலையில் மெகா சைஸ் குளம்போல் தேங்கியது.தற்போது வடிகால் மீது கட்டப்பட்ட சிமென்ட் சிலாப் உடைந்து பணியின் தரத்தை கேள்வி குறியாக்கி உள்ளது.ரெட்டியார்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கட்டப்பட்டு வரும் வாய்க்கால் மேல் பகுதி கான்கிரீட் தளம் மீதுடாடா ஏஸ் வாகனம் சென்றதால், வாய்க்கால் மேல்தளம் உடைந்து பள்ளம் உருவாகி உள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'புதுச்சேரி அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை தேடி தேடி செய்தாலும், மேற்பார்வை செய்ய வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதால் தரமான பணிகள் நடப்பது இல்லை' என்றனர்.