உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்

கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்

நெட்டப்பாக்கம்: கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம் கறவை மாடுகளுக்கு சினை ஊசி போடும் சிறப்பு முகாம் ஏம்பலம் தொகுதி புதுக்குப்பம் கிராமத்தில் நடந்தது.கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர்கள் தாமரைச்செல்வி, சிவசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., கால்நடை பயனாளிகளுக்கு இலவச தாது உப்பு கலவை மற்றும் மாத்திரைகளை வழங்கினார்.ஆத்மா திட்ட கால்நடை மருத்துவர் செல்வமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் மத்திய அரசின் ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் 80க்கும் மேற்பட்ட கறவை மாடுகளுக்கு மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.ஏம்பலம், செம்பியம்பாளையம், நத்தமேடு பகுதிகளை சேர்ந்த கால்நடைகளை விவசாயிகள் அழைத்து வந்து பயனடைந்தனர். ஏற்பாடுகளை கால்நடை மருந்தக ஊழியர்கள் பிரபாகரன், அய்யாசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை